Home இலங்கை அரசியல் மாத்தளை மாவட்டத்தில் வெற்றியை உறுதி செய்த திசைக்காட்டி

மாத்தளை மாவட்டத்தில் வெற்றியை உறுதி செய்த திசைக்காட்டி

0

விருப்பு வாக்கு விபரம் வெளியானது

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன – 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி
(NPP) – 4 ஆசனங்கள்

கமகெதர திஸாநாயக்க – 100,618

சுனில் பியன்வில – 56,932

தீப்தி வாசலகே – 47,482

தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -1 ஆசனம்

ரோகினி கவிரத்ன – 27,945

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் இறுதி  தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 18,1678 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் நான்கு ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 53,200 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஒரு  ஆசனத்தையும் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 13,353வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP)10,150 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளின் படி  மாத்தளை மாவட்டத்தின் வெற்றியை திசைக்காட்டி கைப்பற்றியுள்ளது.

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மாத்தளை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 188,779 வாக்குளையும் 04 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 73,955 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மாத்தளை மாவட்டத்தில் 7,542 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, 6,592 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.   

முதலாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்ட தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 64,206 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,321 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 4,713 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தளை –  லக்கல தேர்தல் தொகுதி

மாத்தளை மாவட்ட லக்கல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 26,687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,172 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 2,198 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தளை – ரத்தொட தேர்தல் தொகுதி

மாத்தளை மாவட்ட ரத்தொட தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 36,375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 14,492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தளை – மாத்தளை தேர்தல் தொகுதி

மாத்தளை மாவட்ட மாத்தளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 37287 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 11041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2341 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 1773  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தளை தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 17123 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 2201 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 954 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 637வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version