Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன

0

சிறிலங்காவின் பிரதமரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்துள்ள பிரதமரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வரவேற்றார்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி சார் நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு 

அதன்படி யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு கடற்றொழில் சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் (District Secretariat Kilinochchi) அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு குழுவின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்புக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sl-pm-dinesh-gunawardena-arrived-in-jaffna-today-1720763949

NO COMMENTS

Exit mobile version