இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர், அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(4) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 64 திட்டங்களுக்காக இவ்வாறு 650 மில்லியன் டொலர் முதலீடு வந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீடு
அவர் மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டுக்கு எந்தளவு முதலீட்டாளர்கள் வந்துள்ளார்கள் என்று பாருங்கள். இந்த காலாண்டில் மட்டும், 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் 483 டொலர் மில்லியன் அந்நிய நேரடி முதலீடு வந்தன. 2024 ஆம் ஆண்டில் 724 அந்நிய நேரடி முதலீடு வந்தன.
ஆனால் வருடம் முழுவதும் 93 திட்டங்கள் மட்டுமே வந்தன. இப்போது எங்களிடம் முதல் காலாண்டில் மாத்திரம், 64 திட்டங்கள் உள்ளன.
650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக BOI தலைவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
