Home இந்தியா யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது – திருமாவளவன் எம்.பியின் அவசர கோரிக்கை

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது – திருமாவளவன் எம்.பியின் அவசர கோரிக்கை

0

இலங்கைக்கு (Sri lanka) அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) தெரிவித்துள்ளார்.

இந்திய (India) அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து இலங்கைக்கு திரும்பிய 74 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அகதிகள் பாதுகாப்பு

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய அரசை நம்பி தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.

இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/s8WFdQh-sPo

NO COMMENTS

Exit mobile version