Home இலங்கை சர்ச்சைக்குரிய இ-விசா விவகாரம் : விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள அரசு

சர்ச்சைக்குரிய இ-விசா விவகாரம் : விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள அரசு

0

இலங்கையின் விசா செயலாக்கத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதில் சர்ச்சைக்குரிய “இ-விசா” மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, இணைய விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீண்டும் செயலாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) விசா ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

அத்துடன் குறித்த ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இது தொடர்பிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version