Home இலங்கை அரசியல் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

0

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற
உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(15) கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

சத்தியப் பிரமாணம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டு சத்தியப் பிரமாணம்
செய்து கொண்டனர்.

இதில், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version