Home உலகம் இஸ்ரேல்-ஈரான் போர் : இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் போர் : இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

0

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களை மேற்கொள்ளவேண்டாமென பிரிட்டன்(us)மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இஸ்ரேலுக்கு “அத்தியாவசியப் பயணங்களைத் தவிர வேறு எவ்வித பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாஅமன அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பயணம் செய்வது  சாத்தியமற்றது

இஸ்ரேலுக்கு பயணம் செய்வது தற்போது சாத்தியமற்றது, நாட்டிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ விமானங்கள் எதுவும் இல்லை எனவும் பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிறுத்தப்பட்ட விமான சேவை

இதேவேளை ஈரான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலின் வான்வெளி தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்போது மூடப்பட்டிருப்பதால், ஜூன் 17 வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேலிய விமான நிறுவனமான(Israel’s national airline) எல் அல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குத் திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் உள்ள எல் அல் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் சிரமம், நிச்சயமற்ற தன்மை மற்றும் மன அழுத்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று எல் அல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version