Home இலங்கை அரசியல் வவுனியாவின் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது சிறிலங்கா சுதந்திரக் கட்சி

வவுனியாவின் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது சிறிலங்கா சுதந்திரக் கட்சி

0

சிறிலங்கா சுதந்திரக் கட்சி

வவுனியா மாவட்டத்தின் 5 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிட நேற்றைய தினம்(14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி
அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும்
19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

கட்சி முக்கியஸ்தர்கள்

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ்
பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை வாசல, விக்டர்ராஜ் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள்
கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version