Home இலங்கை அரசியல் கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் அநுர அரசின் இரகசிய நகர்வுகள் முறியடிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் அநுர அரசின் இரகசிய நகர்வுகள் முறியடிப்பு

0

கிழக்கு மாகாணம் கல்வி சார்ந்த பின்னடைவுகளை தற்காலப் பகுதியில் அதிகம் எதிர்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பில் கல்வி அமைச்சின் ஒரு முக்கிய கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கான வலயக் கல்வி பணிப்பாளர் நியமனம் நீண்ட காலமாக இடம்பெறாமல் இருக்கின்றது அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நாட்டினுடைய பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்தவர்கள் என்று உத்தியோகபூர்வ தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் பேரவை உறுப்பினர்களின் பெயர் விபரம் பின்வாங்கப்பட்டது.

அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியினுடைய பல்கலைக்கழக தரப்படுத்தலிலும் கிளீன் சிறீலங்கா செயற்படுத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பேரவை உறுப்பினர்களுடைய நியமனம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய தலையீட்டால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் விரிவான விடயத்தை கீழுள்ள காணொளியில் காணலாம்…

NO COMMENTS

Exit mobile version