Home இலங்கை அரசியல் அமெரிக்கா பறந்த பசில் – மொட்டுக்கட்சி தலைமைக்கு எழுந்த சிக்கல்

அமெரிக்கா பறந்த பசில் – மொட்டுக்கட்சி தலைமைக்கு எழுந்த சிக்கல்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டதரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வர வேண்டும் எனக் கட்சியின் செயற்பட்டாளர்கள் சிலர் கோரி இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்று பசில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே (Namal Rajapaksa) வழிநடத்துவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பவில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்கா (USA) பறந்த மொட்டுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட நாடு திரும்பவில்லை.

இதனால் நாடாளுமன்றத் தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார். ஓரிரு கூட்டங்களில் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பசில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிய வேட்புமனு

2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை கோர அனைத்து கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைமைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது

NO COMMENTS

Exit mobile version