Home இலங்கை அரசியல் 13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி

13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) ஆதரித்தாரா என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெளிவுபடுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.   

இந்த திருத்தத்தின் நடைமுறை தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையிலேயே, அந்த கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள்

இந்த நிலையில், 13 ஆவது திருத்தத்தின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு என்ன என ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் மாகாணங்களிலும் காவல்துறை மா அதிபர்கள் செயற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கை மக்கள் தற்போது போரற்ற நிம்மதியான சூழலில் வாழ்வதாகவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் படையினரும் பாதுகாத்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் ரோஹித அபேகுணவர்தன கோரியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version