வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில்
விக்ரமசிங்கவுக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க வருவார்.
வாக்கு வேட்டை
எனவே,
யானை சின்னம் மாறக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி வசம் 30 இலட்சம் வாக்குகள்
உள்ளன. அந்த எண்ணிக்கையில் இருந்துதான் வாக்கு வேட்டை ஆரம்பமாகும்.
ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சிக்குரிய 69 லட்சம் வாக்குகளில் 39 லட்சம் கிடைத்தாலே
ரணிலின் வெற்றி உறுதியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.