ஐரோப்பிய விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், போலந்தின் வார்சாவிலிருந்து ஓமன், மஸ்கட் வழியாக கொழும்புக்கு விமான பயணங்களை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் வாராந்திர பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மஸ்கட்டில் இருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மஸ்கட்டுக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விமான நிறுவனம்
அதற்கான அட்டவணைக்கமைய, விமானம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 5.30 மணிக்கு வார்சாவிலிருந்து புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.
மஸ்கட் மற்றும் வார்சாவிற்கு திரும்பும் விமானம் கொழும்பிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு போலந்து தலைநகரை சென்றடையும்.
விமான நிறுவனம்
ஸ்மார்ட்விங்ஸ் என்பது செக் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம் மற்றும் மத்திய ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த விமான நிறுவனம் ஸ்மார்ட்விங்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
இதில் ஸ்மார்ட்விங்ஸ் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும். மேலும் இந்த நிறுவனம் தற்போது உலகளவில் 80இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்களை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.