பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வாகனத் தொடரணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பமான இரத்தினக் கல் கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தந்திருந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடு
அதன்போது அவர் பயணிக்கும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக பயணித்த பொலிஸ் மோட்டார் சைக்கிளுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது மாணவர் ஒருவரை பிரதமரின் வாகனத் தொடரணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
