Home முக்கியச் செய்திகள் ஸ்மோக் பிஸ்கெட்களால் உயிருக்கு ஆபத்து: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

ஸ்மோக் பிஸ்கெட்களால் உயிருக்கு ஆபத்து: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

0

ஸ்மோக் பிஸ்கெட், தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு உணவுவகையாகும்.

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில்ட ஸ்மோக் பிஸ்கட்டை ஆசையாக வாங்கிச் சாப்பிட்ட சிறுவன், வலியில் துடிதுடித்த நிலையில், புகை பிஸ்கட்டுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்மோக் பிஸ்கெட், வாயில் போட்டவுடன் ஜில்லென்று ஒரு உணர்வும், வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வெளியேறும் பிஸ்கெட் தான் இந்த ஸ்மோக் பிஸ்கெட்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மந்தநிலை: வெளியாகியுள்ள தகவல்!

ஸ்மோக் பிஸ்கெட்

இந்த அனுபவத்திற்காக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இதை உண்கிறார்கள்.

இந்த பிஸ்கெட்டில் திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்டிருப்பதால் அதனை வாயில் போடும் போது புகை வருகிறது.

மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள திரவ நைட்ரஜன், ஸ்மோக்கிங் பிஸ்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.

வலியில் துடிதுடித்த சிறுவன்

அண்மையில் ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கிச் சாப்பிட்ட சிறுவன் வலியில் துடிதுடித்த காட்சி, இணையத்தில் வைரலாகியது.

அதன் பின்னர் சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டான்.

சிறுவன் பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டிருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது என்றும், அதனுடன் நைட்ரஜன் திரவத்தையும் சேர்த்து உண்டதால், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது.

திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எதையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

விற்பனைக்கும் தடை

எனவே பிஸ்கட்டுடன், நைட்ரஜன் திரவம் உடலின் உள்ளே செல்லும்போது, உணவுக்குழாய் அடைப்பு ஏற்படுவதுடன், தோல் திசுக்களும் உறையும் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இளம் மஞ்சள் நிற பஞ்சு மிட்டாயை தடை செய்தது போன்று, ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற திண்பண்டங்களை விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version