Home இலங்கை அரசியல் இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கலந்துரையாடல்

இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கலந்துரையாடல்

0

இலங்கை தமிழரசு கட்சியின் எதிர்கால கட்சி நடவடிக்கைகள் தொடர்பான விசேட  கலந்துரையாடல் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ச. குகதாசன் (Gugadasan) தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த உரையாடலானது, இன்று (24.04.2024) திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழரசு கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான நீதிமன்ற இடைக் காலத் தடை குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்கால நடவடிக்கைகள்

தமிழர்தரப்பு பொது வேட்பாளர் தகுதி ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமே

 

மேலும், எதிர்காலத்தில் வழக்கினை தொடர்ந்து கொண்டு செல்லாமலும் காலம் தாழ்த்தாமலும் சுமூகமான தீர்வுகள் ஊடாக கட்சியை வளப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அது மாத்திரமன்றி, கட்சியின் எதிர்கால ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பில்
கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

அவுஸ்திரேலிய சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டப்பெற்ற இலங்கையின் பாரம்பரிய உணவு

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாசவை நியமிக்கும் திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version