Home இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் பணிஸில் இறந்து கிடந்த பாம்பு: வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் பணிஸில் இறந்து கிடந்த பாம்பு: வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0

 தெலுங்கானா மாநிலத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று(12) அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பணிஸ் மற்றும் ஒரு கோழி பணிஸ் வாங்கி சென்றார்.

பணிஸில் இறந்து கிடந்த பாம்பு

வீட்டில் கோழி பணிஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த சிறிய பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

உரிமையாளரின் நடத்தையால் கடும் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தி புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version