Home இலங்கை அரசியல் தேர்தல் ஆணையகத்தின் கோரிக்கையை நிராகரித்த சமூக ஊடகத்தளங்கள்

தேர்தல் ஆணையகத்தின் கோரிக்கையை நிராகரித்த சமூக ஊடகத்தளங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

 தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் சில உள்ளடக்கங்களை நீக்குமாறு, தேர்தல் ஆணையகம் விடுத்தக் கோரிக்கையை சமூக ஊடக தளங்கள் நிராகரித்துள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறிய 201 இடுகைகளை நீக்க, தேர்தல் ஆணையகம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் Meta, YouTube, TikTok மற்றும் Google ஆகியவை அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டன.

தேர்தல் சட்டங்கள்

சுமார் 937 கேள்விக்குரிய இடுகைகள் தேர்தலுக்கு முன்னர், குறித்த தளங்களில் இடுகையிடப்பட்டிருந்தன.

எனினும், தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறி 872 பதிவுகள் சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களால் நீக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version