இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்குத்
தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில் முயற்சியாளர் ஒருவருக்கும்
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்று(24) நடைபெற்ற
சந்திப்பின்போதே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, கடற்றொழில், சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப்
பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டுள்ளன.
Source: https://tamilwin.com/article/southkorea-agrees-invest-agriculture-sector-energy-1724532750
