தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை(scholarship exam) நிறுத்தபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் பலர் இதற்கு நேர்மறையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், லங்காசிறி ஊடகம் முன்னெடுத்த கருத்து கணிப்பிலேயே இவ்வாறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதாக அமைந்தாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக பெற்றோர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையானது தரம் 5 இல் அவசியமற்ற ஒன்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தாளுடன் முன்னோடி பரீட்சைத் தாள் பகிரப்பட்டதால் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், மக்கள் பின்வருமாறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
https://www.youtube.com/embed/WT-1lEdkGU0