Home சினிமா மலேசியாவில் அஜித்தை சந்தித்த இளம் நடிகை ஸ்ரீலீலா… வைரலாகும் வீடியோ

மலேசியாவில் அஜித்தை சந்தித்த இளம் நடிகை ஸ்ரீலீலா… வைரலாகும் வீடியோ

0

நடிகர் அஜித்

அஜித், தமிழ் சினிமா கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.

கடைசியாக இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வரவேற்பு கிடைத்தது, பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த சொல்லவே வேண்டாம்.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கான மற்ற வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு தான் வருகிறது.

மலேசியா

படங்களை தாண்டி இப்போது அஜித் கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். துபாய், வெளிநாடுகளில் கார் ரேஸில் பங்குபெற்று கலக்கியவர் இப்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸிங்கில் பங்குபெற்று வருகிறார்.

மலேசியா செல்லும் பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிம்பு மலேசியா செல்ல அங்கு அஜித்தை நேரிலும் சந்தித்துள்ளார்.

தற்போது இளம் நாயகியாக ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகை ஸ்ரீலீலா அஜித்தை மலேசியாவில் சந்தித்து செல்பி எடுத்துள்ளார். அந்த வீடியோ இதோ, 

NO COMMENTS

Exit mobile version