Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

0

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. 

அதிகரித்த மதுபானசாலைகள்

நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு,கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இன்று (16.01.2025) நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை.

புதிய அரசியலமைப்பு 

இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான்.

மேலும் இலங்கை விடயம் சம்மந்தமாக தி.மு.க கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.

இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக் கொண்ட விடயம் எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.

தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் பேசிவருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

https://www.youtube.com/embed/2Yru0PYYJO4

NO COMMENTS

Exit mobile version