Home இலங்கை சமூகம் முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இன்று (24) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

முட்டையின் விலை

இதன் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு தேவையான முட்டை உற்பத்தி 85,000 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த விலையில் 35 மற்றும் 36 ரூபாவிற்கு ஒரு முட்டை பண்ணையிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-egg-prices-may-decrease-soon-1729781358

NO COMMENTS

Exit mobile version