Home இலங்கை பொருளாதாரம் ஐ.எம்.எப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை: ஆய்வில் வெளியான தகவல்

ஐ.எம்.எப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை: ஆய்வில் வெளியான தகவல்

0

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கையின் (Sri Lanka) மூன்றாவது கொடுப்பனவை அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே  (Verité Research) நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்

25 வீதக் கடப்பாடுகள்

அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் இலங்கை 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற  தவறியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதன்முறையாக 1700 சம்பளம்!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

எனவே நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மையுடன் சம்பந்தப்பட்டவை எனவும்  கூறப்படுகின்றது.

மேலும், 6 நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடனும் தொடர்புடையவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version