Home இலங்கை அரசியல் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை: நாமல் ராஜபக்ச ஆணித்தரம்

ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை: நாமல் ராஜபக்ச ஆணித்தரம்

0

இன்னும் பத்து வருடங்களில் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உறுதியளித்துள்ளார்

களுத்துறை – அகலவத்தையில் நடைபெற்ற பேரணியில் பேசிய நாமல், நாட்டை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கால சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் உள்ளூர் விவசாயிகளின் தேயிலை, மிளகு மற்றும் பால் போன்ற உற்பத்திகளுக்கு நியாயமான மற்றும் நிலையான விலையை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சக்தி

“சிறு தேயிலை விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் திட்டமிட்ட திட்டத்தின்படி வேலை செய்கிறோம். நாங்கள் கொள்கை ரீதியான அரசியல் கட்சி. எனவே, நாங்கள் ஒரு திட்டத்தின் படி வேலை செய்கிறோம்.

அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடினமான காலத்திலும் சவாலான காலக்கட்டத்திலும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை ரீதியான அரசியல்வாதிகள் கொண்ட ஒரு அரசியல் சக்தியை தாம் உருவாக்கியுள்ளதாவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version