Home இலங்கை சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

0

Courtesy: Sivaa Mayuri

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டமை தொடர்பான தகவல்களுடன், வெளிநாடுகளின் பயண எச்சரிக்கை ஆலோசனைகளை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வெளிநாடுகளின் ஆலோசனைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அகற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் குறித்து, அரசாங்கத்திற்கு உளவுத்துறை கிடைத்ததிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை,
எனினும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்களுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடுகளின் பிரஜைகளுக்கான பாதுகாப்பு குறித்து இலங்கை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version