வடக்கு பிராந்திய சிறிலங்கா கடற்படையினர் நாளை(17.01.2025)பருத்தித்துறை கடலில்
கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள
இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம்
நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த
அறிவித்தலை விடுத்துள்ளார்
கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
நாளை 17.01.2025 காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55’N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E.
ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.