Home இலங்கை அரசியல் ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழப்பது உறுதி : சஜித் அறிவிப்பு

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழப்பது உறுதி : சஜித் அறிவிப்பு

0

அநுர அரசு ஒரு வருடத்துக்குள்
ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்
தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இனியாவது விழிப்படைய வேண்டும்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

போலி வாக்குறுதிகளை வழங்கி போலிக் கல்வித் தகைமைகளுடன் ஆட்சி அதிகாரத்துக்கு
வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்துள்ளது.

அதியுயர் சபையில் போலிக் கலாநிதிப் பட்டத்துடன் சபாநாயகர் கதிரை
அலங்கரித்தவர், ஒரு மாதத்துக்குள் உண்மை நிலைமை வெளியில் தெரியவர பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இனியாவது விழிப்படைய வேண்டும்.

ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்த அரசு, ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது
உறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி விரைவில் மலரும் என  தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version