Home இலங்கை அரசியல் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

0

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின்
கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறிய தவிசாளரான
பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று
நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நா.உ. அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர்அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர், “அதேவேளை கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை
உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த
அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றியது பாராட்டத்தக்கது. 

தேர்தல் 

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஓட்டுமாவடி கோரளைப்பற்று
மேற்கு பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள்
சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஜக்கிய மக்கள் சக்தி
சின்னத்திலே பேர்டியிட்டோம்.

இதில் 8 வட்டாரங்களை நாங்கள் வென்றோம். அதனோடு போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன் 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.

அதேவேளை
தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும்
இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும் சுயேச்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம்
உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் யூன் 16ஆம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய
தினம் எனது கட்சி காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான
கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதே அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன்
பிரதி தவிசாளராக அன்சார் ஆக்கவேண்டும் என்ற அடிப்படையில் கட்சி எடுத்துக்
கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version