ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலை குறையம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அரசாங்கம் தேர்தலுக்காக அதனைச் செய்யவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் மேடை உறுதிமொழிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தல் மேடைகளில் பல்வேறு உறுதிமொழிகளை வேட்பாளர்கள் அள்ளி வழங்குகின்றனர்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சூழ்நிலையில் இவை நடைமுறைச் சாத்தியமானதா என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மேற்கொள்ளக் கூடிய விடயங்களை நாம் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலை குறையம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அரசாங்கம் தேர்தலுக்காக அதனைச் செய்யவில்லை.
அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பதற்கான சிஸ்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த முறைமையின் அடிப்படையிலே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அரச ஊழியர்களின் சம்பளம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறானதொரு சிஸ்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார். இவ்வாறான நிலையில் வேட்பாளர்கள் தாம் கூறும் விடயங்களை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள் என்பதை விரிவாக மக்களுக்கு முன்வைக்க வேண்டும்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கோரிக்கைக்ள தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரினார்கள். எனினும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சூழ்நிலையில் 10 ஆகிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கினோம்.
இது போதாது, மேலும் அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமையவே அரசாங்க ஊழியர் ஒருவரின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாவாக இருக்கும் வகையில் 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை அடுது்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடனேயே இதனை எம்மால் செய்ய முடிந்துள்ளது. எனினும், சில வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை விமர்சிப்பதுடன், தாம் ஆட்சிக்கு வந்ததும் முழுமையாக ஒப்பந்தத்தை மாற்றியமைப்போம் என்று கூறுகின்றனர். இது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.