Home இலங்கை அரசியல் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குரிய உத்தரவாதத்தை சஜித் வழங்கவில்லை! நாமல்

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குரிய உத்தரவாதத்தை சஜித் வழங்கவில்லை! நாமல்

0

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குரிய
உத்தரவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ
வழங்கவில்லை. மாறாக அவர் ஐக்கிய இலங்கை தொடர்பிலேயே பேசி வருகின்றார்.

ஆனால்,
ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என மொட்டுக்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம் 

அத்துடன்,
அரசமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி
அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் நாமல் ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
எம்.பி.தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

உலகில் ஒற்றையாட்சியுடைய நாடுகள் உள்ளன, ஐக்கிய நாடுகள் உள்ளன. ஐக்கிய அரசு
இராஜ்ஜியத்தை எடுத்துக்கொண்டால் மூன்று நாடுகள் இணைந்து
உருவாக்கப்பட்டதொன்றாகும்.

எந்நேரத்தில் வேண்டுமானாலும் அந்நாடுகளால் பிரிந்து
செல்ல முடியும். ஐக்கிய இராஜ்ஜியம் என்பது அப்படிதான். 28 நாடுகள் இணைந்து
உருவாக்கப்பட்டது.

இதைத்தான் ஐக்கிய நாடு என்பது.

சஜித் பிமேரமதாஸ கடந்த காலங்களில் ஐக்கிய இலங்கை தொடர்பிலேயே பேசி
வருகின்றார். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்கூட ஒற்றையாட்சி பற்றி
குறிப்பிடப்படவில்லை.

13 இற்கு அப்பால் சென்று அதிகாரம் பகிரப்படும் எனக்
கூறப்பட்டுள்ளது.

வடக்கு மக்களுக்கு ஒன்றையும், தெற்கு மக்களுக்கு வேறொன்றையும் கூறி மக்களை
ஏமாற்றும் அரசியலை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version