Home இலங்கை அரசியல் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: தூதுவர் விளக்கம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: தூதுவர் விளக்கம்

0

இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் வலியுறுத்தியுள்ளார்.

நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை என்றும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என தீர்மானிப்பது உங்கள் மக்களை பொறுத்தவிடயம் எனவும் கூறியுள்ளார்.

அமைதியான தேர்தல்

மேலும், ரஷ்யா உங்கள் தெரிவுக்கு மதிப்பளிக்கும் என்றும்,  நீங்கள் தெரிவு செய்யும் எந்த ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஸ்ய தூதுவர், புதிய ஜனாதிபதியும் நடுநிலைமை கொள்கைகளை பின்பற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் சமநிலையான,நடுநிலையான வெளிவிவகார கொள்கைக்கு ரஷ்ய தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version