Home இலங்கை உலகின் மிகவும் அழகான தீவு : முதலிடம் பிடித்து அசத்திய இலங்கை

உலகின் மிகவும் அழகான தீவு : முதலிடம் பிடித்து அசத்திய இலங்கை

0

உலகளாவிய பயண தளமான பிக் 7 டிராவல் தொகுத்த “உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிக அழகான தீவாக இலங்கை(sri lanka) முடிசூட்டப்பட்டுள்ளது.

2025 பட்டியலில் உலகின் மிகவும் அழகான தீவுகள் இனம்காணப்பட்டுள்ளது. பிரெஞ்சு பொலினீசியாவில் உள்ள மோரியா, ஈக்வடோரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நன்கு அறியப்பட்ட தீவு சொர்க்கங்களை இலங்கை முந்தி உள்ளது.

 கலாசார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் – அழகிய கடற்கரைகள்

பிக் 7 டிராவல் படி, இலங்கை அதன் வளமான கலாசார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இலங்கை தேசத்தை அதன் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் துடிப்பான உள்ளூர் அனுபவங்களுக்காகவும் பட்டியல் பாராட்டியுள்ளது.

2025 தரவரிசையில் முதல் 10 இடங்கள் வருமாறு,

இலங்கை(Sri Lanka)

மூரியா,(Mo’orea)

பிரெஞ்சு பொலினீசியா(,French Polynesia )

சோகோட்ரா,ஏமன்(Yemen Socotra)

மடீரா(Madeira)

தி கலபகோஸ், ஈக்வடோர்( The Galápagos, Ecuador)

கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ்(Great Exuma, Bahama s)

சீஷெல்ஸ்(Seychelles )

அச்சில் தீவு, அயர்லாந்து( Achill Island,  Ireland )

கோ லிப், தாய்லாந்து(Koh Lipe  Thailand)

மிலோஸ், கிரீஸ்( Milos, Greece) 

NO COMMENTS

Exit mobile version