Home இலங்கை பொருளாதாரம் வெளிநாடு சென்றவர்களால் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்

வெளிநாடு சென்றவர்களால் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்

0

 2025 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு 697.3 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஜூன் மாதத்தில் பெறப்பட்ட 635.7 மில்லியன் டொலரை விட 9.7% அதிகரிப்பாகும்.

அதிகரித்த வெளிநாட்டு கையிருப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 576.7 மில்லியன் டொலராக இருந்த பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில், இது ஆண்டுக்கு ஆண்டு 21% உயர்வைக் காட்டுகிறது.

இந்த வலுவான பணப்பரிமாற்றம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்தியுள்ளது.
ஜூலை மாத இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.14 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் (PBOC) இருதரப்பு ஒப்பந்தங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த பணப்பரிமாற்ற உயர்வு இலங்கையின் பொருளாதார வலுவை மேலும் பலப்படுத்துமென பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version