Home இலங்கை சமூகம் பேரிடரில் உயிர்நீத்த இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

பேரிடரில் உயிர்நீத்த இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

0

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் நாளைய மறுதினம்(13.12.2025) சனிக்கிழமை அன்று  மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு அழைப்பு 

லண்டன் மார்பிள் ஆர்ச் சுரங்க புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இந்த  நிகழ்வு நடைபெறவுள்ளது.

அஞ்சலி நிகழ்வு பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கையர்கள் ஒன்று கூடுமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பான மேலதிக விபரங்களை +447976572579 (சிந்தக்க சமரசிங்க) என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன்  ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

NO COMMENTS

Exit mobile version