இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, உத்தியோகபூர்வ கையிருப்பு 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு
இந்தநிலையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
