Home இலங்கை 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை

90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை

0

வீதி மேம்பாட்டிற்காக, இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 90
மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இரண்டு
தரப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.

வானிலைக்கு ஏற்ற தரநிலை

நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான
பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்த கடன்
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற சமூகங்கள் மற்றும் முக்கிய சமூக-பொருளாதார
மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதம், வலுப்படுத்துவதும் இந்த
திட்டத்தின் நோக்கமாகும்.

அத்துடன் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
அனைவரும் அணுகக்கூடிய சுமார் 500 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகளை
மேம்படுத்துவதற்கு இந்த கடன் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அவை காலநிலை மற்றும் வானிலைக்கு ஏற்ற தரநிலைகளுக்கு ஏற்ப
உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version