Home இலங்கை இலங்கைக்கும் AI சிங்கப்பூர் நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு

இலங்கைக்கும் AI சிங்கப்பூர் நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு

0

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கும் AI சிங்கப்பூர் நிறுவனத்துக்கு
இடையில் செயற்கை நுண்ணறிவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் AI சிங்கப்பூர் நிறுவனத்தின் புத்தாக்க
பணிப்பாளர் லோரன்ஸ் லீவ் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர்
செனரத் திசாநாயக்க ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர்.

 இலங்கை – சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவு பரிமாற்றம், ஆலோசனை ஆதரவு மற்றும் திறன்
மேம்பாடு மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதை இந்தக் கூட்டாண்மை
நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version