Home விளையாட்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

0

மேற்கிந்தியத் தீவுகள் (WI) அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை (Sri Lanka) குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13ஆம், 15ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கை குழாம் 

இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

ரி20 கிரிக்கெட் தொடர் தம்புள்ளையிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் கண்டியிலும் இடம்பெறவுள்ளது.

அணி விபரம்:    சரித் அசலங்க (அணித்தலைவர்)

பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்,  குசல் ஜனித் பெரேரா,    கமிந்து மெண்டிஸ்,    தினேஸ் சந்திமால்,    அவிஷ்க பெர்ணான்டோ,    பானுக ராஜபக்‌ஷ,    வனிந்து ஹசரங்க,    மஹீஷ் தீக்ஷன,    துனித் வெல்லாலகே,    ஜெப்ரி வெண்டர்சே,    சமிந்து விக்ரமசிங்க,    நுவன் துஷார,    மதீஷ பத்திரன

பினுர பெர்ணான்டோ,    அதித பெர்ணான்டோ

 மேற்கிந்தியத் தீவுகள் அணி 

இதன்படி, இருபதுக்கு 20 போட்டித் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ரொவ்மன் பவல் தலைமை தாங்கவுள்ளார்.

குறித்த தொடரிலிருந்து நிகோலஸ் பூரன், அண்ருவ் ரஸ்சல், அகேல் ஹொசைன் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version