Home இலங்கை அரசியல் தமிழருக்கு தீர்வு உறுதி..! பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

தமிழருக்கு தீர்வு உறுதி..! பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

0

புதிய
அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய
தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்குத் தமிழ் மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள்.
எமது ஜனாதிபதி மீதும், எமது அரசு மீதும் தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை நாம்
வீணடிக்க மாட்டோம்.

நிறைவேற்றியே தீருவோம்

வடக்கு, கிழக்குக்கு நாம் விஜயம் செய்யும் ஒவ்வொரு தடவையும் அரசியல் தீர்வு
தொடர்பில் தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளுடன் எம்முடன் பேசுவார்கள்.

எனவே, அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றியே தீருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version