இலங்கையை உலுக்கிய பேரனர்த்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
அதனால் முழு இலங்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான நட்புறவின் அடிப்படையில், உதவிகளை வழங்குவதற்கு இந்தியா எப்பொழுதும் தயாராக இருப்பதாக தொடர்ச்சியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது இலங்கையின் பாதுகாப்பை அடிப்படையாக வைத்துதான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய உதவிகள் கிடைக்கப்படும் நிலையில், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கை உள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…
