Home முக்கியச் செய்திகள் 2024 இற்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் !

2024 இற்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் !

0

 2024 ஆம் ஆண்டு பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கையிலிருந்து (Sri Lanka) இரு வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், தருஷி கருணாரத்ன (Darushi Karunaratne) மற்றும் டில்ஹாணி லேகம்கே (Dilhani Legamke) ஆகிய இருவரே இவ்வாறு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி

இந்தநிலையில், தருஷி கருணாரத்ன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் டில்ஹாணி லேகம்கே பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version