Home இலங்கை அரசியல் பொறுப்புக்கூறலுக்கு தயார்..! இலங்கை அரசு உறுதி

பொறுப்புக்கூறலுக்கு தயார்..! இலங்கை அரசு உறுதி

0

மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம்
மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக
உள்ளதாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
ஆணையாளர்; வோல்கர் டர்க்கிற்கு உறுதியளித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள். மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில்
தற்போது கலந்து கொண்ட அமைச்சர் ஹேரத், நேற்று(10) டர்க்கை சந்தித்தார்.

முறையான சுயாதீன விசாரணை

இந்தக் கூட்டத்தின் போது, வோல்கர் டர்க் சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆழமான
விவாதம் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையில் எழுப்பப்பட்ட வியங்கள் குறித்து இலங்கையின் நிலைப்பாடு குறித்து
அமைச்சர் ஹேரத் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு
திருப்புமுனையை ஏற்படுத்தும்.

அத்துடன், கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு முறையான சுயாதீன விசாரணை
மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை நாடு இழக்காது
என்றும்; ஆணையாளர் டர்க் நம்பிக்கை வெளியிட்டதாக இலங்கையின் வெளியுறவு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version