முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கி இருந்த அதிகாரப்பூர்வ இல்லத்தை எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விற்கு வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு சேவையாற்றிய அரச தலைவர் ஒருவருக்கு அவரது ஓய்வு காலத்தில் வழங்கப்படும் சிறப்பு உரிமைகளை அரசியல் அமைப்பிலிருந்து சட்டமூலங்கள் ஊடாக நீக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நாட்டின் கலாச்சாரத்தில் அந்த விடயத்தை அகற்றி விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு திருப்புமுனையான தீர்மானங்களை தங்காலை கார்ல்டன் இல்லத்திலிருந்து மேற்கொண்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் காலத்திலும் அவ்வாறான ஏதேனும் புதிய ஓர் விடயத்தை சில நேரங்களில் எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த தங்காலைக்கு சென்ற விவகாரம் அரசாங்கத்திற்கு சில வேலைகளில் ஓர் வித்தியாசமான ஒன்றாக உணர நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது அரசாங்கம் ஒன்று ஆட்சி பீடம் ஏறும் போது மஹிந்த வசித்து வந்த வீட்டை அநுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்குமாறு தாம் யோசனை ஒன்றை அப்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிய உள்ளதா சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதில்லை எனுவும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
