இலங்கைக்கு இரண்டுநாள் அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள இந்திய பிரதமர் மோடி கொழும்பில் வசிக்கும் இலங்கை வாழ் இந்தியர்களை சந்தித்துள்ளார்.
இந்திய பிரதமர் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக சென்று கைலாகு கொடுத்து சந்தித்தது அந்த மக்களை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் மோடி தனது எக்ஸ் தள பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். pic.twitter.com/SkBJW05psQ
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
https://www.youtube.com/embed/M0-nyCvqvuc
