Home இலங்கை அரசியல் புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியடையும் மக்கள்: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியடையும் மக்கள்: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

0

மக்கள் தமக்கான தலைவரை நியமித்ததன் காரணமாக இன்று மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது, திசைக்காட்டிக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து மக்களும் புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

அத்தோடு, அனைத்தும் நிறைவேறவில்லை என தெரிவித்த ஹந்துன்நெத்தி, புதிய பயணமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் சவால்களில் ஒன்று, நாடாளுமன்றத்தை நல்லவர்களைக் கொண்டு நிரப்புவது என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Source: https://ibctamil.com/article/sri-lankan-people-happy-with-the-new-government-1729939523

NO COMMENTS

Exit mobile version