பிரித்தானியாவில்(United Kingdom ) வாழ்ந்துவந்த பிபிசி செய்தியாளரான இலங்கைத் தமிழர் ஜோர்ஜ் அழகையா(George-alagiah), எழுதிவைத்துச் சென்ற உயில் தொடர்பில் சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி புற்றுநோயால் மரணமடைந்தார்.
ஜோர்ஜ் அழகையா, Frances என்ற பெண்ணை திருமணம் முடித்ததுடன் அவர்களுக்கு Adam மற்றும் Matthew என்னும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஆட்டம் காணும் மோடி அரசியல்: வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி
இலங்கைத் தமிழர்
இந்நிலையில், அழகையா எழுதிவைத்துச் சென்ற உயில் தொடர்பில் சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த உயிலிலிருந்து, அவர் தன் மனைவிக்காக விட்டுச் சென்ற சொத்து 49,387 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
பிபிசியின் பிரபல செய்தியாளர்களில் ஒருவரான அழகையாவின் சம்பளம், 335,000 முதல் 399,999 பவுண்டுகள் ஆகும்.
அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை
விட்டுச் சென்ற சொத்து
எனினும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காக அவர் செலவு செய்யவேண்டியிருந்ததுடன் ஒருமுறை அந்த சிகிச்சை செய்ய குறைந்தபட்சம் 30,000 பவுண்டுகள் வரை செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு பிபிசியில் இணைந்த அழகையா, 2008ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியாரின் கையால் Order of the British Empire என்னும் கௌரவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான புதிய தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |