Home உலகம் பாரிய சிக்கலில் சுவிஸில் வாழ் இலங்கை தமிழர்கள்

பாரிய சிக்கலில் சுவிஸில் வாழ் இலங்கை தமிழர்கள்

0

சுவிட்சர்லாந்தில் இலங்கையை (Srilanka) சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார்.

காத்திருந்த அதிர்ச்சி

இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார்.

இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version