Home இலங்கை இணையக்குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

இணையக்குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

0

Courtesy: Sivaa Mayuri

மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் (Myanmar) சிக்கியிருந்த முப்பத்திரண்டு இலங்கை நாட்டவர்கள், ஒருங்கிணைந்த செயல்முறையைத் தொடர்ந்து நேற்று (25) மீட்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மற்றும் தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இலங்கை தூதுவர்கள் இந்த செயல்முறையை ஒருங்கிணைத்தனர்.

இணையக் குற்ற நடவடிக்கை

மீட்கப்பட்ட இலங்கையர்கள், இணையக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு, மனித கடத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மீட்கப்பட்டவர்களை இலங்கைக்கு விரைவாக திருப்பி அனுப்புவதற்கு, புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்புடன் ((IOM) இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய 32 இலங்கையர்களும், இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் கையளிக்கப்பட்டனர்.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒருங்கிணைப்புடன் இலங்கை அரசாங்கத்தால் மொத்தம் 28 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version