Home இலங்கை அரசியல் கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

0

இலங்கை அடுத்த மாதம் போர் வெற்றியை கொண்டாடும் போது கனேடியத் தலைவர்கள்
இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்களா என்பது தொடர்பில்
எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கை (Sri Lanka) இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக் காலத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.இது இரண்டு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியுள்ளது.

வெளிநாட்டிற்கு பணிக்கு சென்று இலங்கை திரும்பிய வைத்தியருக்கு அதிர்ச்சி

குற்றச்சாட்டு 

இதற்கு பதிலடி
கொடுக்கும் வகையில் இலங்கை கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து தமது எதிர்ப்பை
வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், இதே குற்றச்சாட்டை கனேடிய பிரதமர் சுமத்துவாரா என்பதை இலங்கை
அரசாங்கம் எச்சரிக்கையுடன் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போரின் போது நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று
கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள்
இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : வெளியான திடுக்கிடும் தகவல்கள்

உயர்ந்த வேகத்திலேயே வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version